15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது 15 வயது சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரை அண்ணாசாலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் அன்பழகன் (25) என்பதும், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த இவர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும்தெரிய வந்தது.மேலும் சிறுமியை 39 வயதுடையவர் திருமணம் செய்துள்ளார். அவர் யார்? பாலியல் தொழிலில் சிறுமியை ஈடுபட வைத்தது யார்? என்பது குறித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.