Categories
உலக செய்திகள்

ஹாரி-மேகன் குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்தவர் யார்…? புத்தகத்தில் வெளியான தகவல்…!!

பிரிட்டன் இளவரச தம்பதி, ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்த அரச குடும்பத்தின் உறுப்பினர் தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் பிரபல நடிகையான மேகனுக்கும், கடந்த 2017 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  அந்த சமயத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் தொடர்பில் விமர்சித்ததாக மேகன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அது யார்? என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் வாழ்க்கை தொடர்பில், கிறிஸ்டோபர் ஆண்டர்சன் என்ற ஆசிரியர் எழுதி, நாளை வெளிவர இருக்கும் ஒரு புத்தகத்தில், ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் பற்றி விமர்சித்தது இளவரசர் சார்லஸ் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஹாரி-மேகன் நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது, இளவரசர் சார்லஸ், கமீலாவிடம், ஹாரி-மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள்? என்று தனக்கு வியப்பாக இருப்பதாக கூறியிருக்கிறார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கமீலா, குழந்தைகள் அழகாகத்தான் இருப்பார்கள், அதில் தனக்கு சந்தேகமில்லை என்று கூறியிருக்கிறார்.

அதற்கு சார்லஸ், “அதாவது அந்த குழந்தைகளின் நிறம் எப்படி இருக்கும், என்று நீ எண்ணுகிறாய்? என்று கேட்டதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை இளவரசர் சார்லஸின் செய்தி தொடர்பாளர் மறுத்திருக்கிறார். இது கற்பனை என்றும், கருத்து கூறும் அளவிற்கு தகுதியான விஷயம் கிடையாது என்றும் கூறிவிட்டார்.

ஆனால், மேகன், நேர்காணலின் போது எங்களின் குழந்தை பிறக்கும் முன்பே அதன் நிறம் தொடர்பில் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் விமர்சித்தார் என்று கூறியிருந்தார். ஆனால், மேகன் கூறிய அந்த ராஜ குடும்ப உறுப்பினர் இளவரசர் சார்லஸ் தான் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை.

அது, மிக எதார்த்தமாக சார்லஸ் பேசிய ஒரு வார்த்தை என்றும் அரண்மனை பணியாளர்களில்  முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர், அதை பெரிதுப்படுத்திவிட்டதாக ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |