ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு படக்குழுவினர் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thank you for all the love ❤️ #Maanaadu #MaanaaduBlockbuster @vp_offl @kalyanipriyan @thisisysr @Premgiamaren @silvastunt @iam_SJSuryah @Cinemainmygenes @sureshkamatchi @vasukibhaskar pic.twitter.com/jmMAUTx0KY
— Silambarasan TR (@SilambarasanTR_) November 28, 2021