Categories
தேசிய செய்திகள்

ஒரே ட்ரெண்டில் எழுச்சி…! சிக்கலில் Jio,Voda,Airtel… கெத்து காட்டும் BSNL…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன் பிறகு வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது ஜியோ தங்களின் ப்ரீபெய்டு கட்டணத்தை டிசம்பர் 1ஆம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஜியோவை நம்பி இருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி போட்டி போட்டு விலை ஏற்றினால் என்னதான் செய்வது என்று மக்கள் புலம்பி வருகின்றனர். ஒருபக்கம் மழையால் அவதிப்படும் மக்கள், மறுப்பக்கம் காய்கறிகளின் விலை உயர்வால் அவதியடைந்து வருகின்றனர். தற்போது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது மக்களுக்கு பெரும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

https://twitter.com/SunilKumar78789/status/1465151421020454915

https://twitter.com/GulhaneTarang/status/1465153902802706435

இந்நிலையில் வலைத்தளங்களில் Jio, Voda, Airtel தனது சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில் அனைவரும் BSNL நெட்ஒர்க்குக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து ட்ரெண்டிங் வருகின்றனர். Jio,Voda, Airtel உள்ளிட்ட நெர்வோர்க்கை புறக்கணிப்போம் என #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டக்கில் BSNLளுக்கு மாறலாம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |