Categories
உலக செய்திகள்

2 நாட்கள் நடைபெறும் பயிற்சி…. மேம்படுத்தப்படும் கடற்படை செயல்திறன்…. தகவல் வெளியிட்ட தூதரகம்….!!

கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் முத்தரப்பு போர் பயிற்சி “தோஸ்தி” என்னும் பெயரில் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளின் முத்தரப்பு கூட்டு பயிற்சி போர் மாலத்தீவு கடல்பகுதியில் வைத்து நடைபெறுவதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 2 நாள் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியதாவது, மாலத்தீவு, இந்தியா, இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடற்படை செயல்திறனை அதிகப்படுத்துவது உட்பட பல முக்கிய காரணங்களால் இந்த தோஸ்தி என்னும் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பி8ஐஎன்னும் போர் விமானமும் இந்த தோஸ்தி என்னும் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |