Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னையில் நடைபெறும் 14 வது மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற மாநில கோரிக்கை மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு ஊழிய கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றி தருவதாக இணைய வழியில் உறுதியளித்தார்.

அதன்படி அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அனைத்து அரசுத் துறைகளிலும் ஒப்பந்த முறை மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி புரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகங்கள், வன ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க ஆலோசனை செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசுத் துறையில் சுமார் 4.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, விடுப்பு உள்ளிட்ட நிலுவைத் தொகை வழங்க கோருதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |