Categories
அரசியல்

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவேண்டும்…. கம்யூனிஸ்டின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய எடப்பாடிபழனிசாமி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள வழக்காரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசு, தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக 4,000 கோடி ரூபாய் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக எடப்பாடிபழனிசாமியின் முன்னால் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்ட முத்தரசன், இந்த முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories

Tech |