கடந்த 29ஆம் தேதி சுவர் இடிந்து மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29ஆம் தேதி கம்மியம்பேட்டை பகுதியில் நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணன், மனைவி மாலா மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் , முன்னாள் அமைச்சர்கள் நேரு , எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு திமுக சார்பில் ரூ 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.