காஷ்மீர் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறை பயங்கரவாதிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. நேற்று நள்ளிரவு 1.37 மணிக்கு கௌதம் நம்பியிருக்கும் ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர்@யாஹூ. காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதில் “உங்கள் டெல்லி போலீசார் எதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது என்றும் எங்களின் உளவாளிகள் போலீஸ் துறையில் உள்ளனர். அதனால் உங்களை பற்றிய அனைத்து தகவல்களும் எங்களுக்கு கிடைத்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே மின்னஞ்சல் அனுப்பியவரின் அடையாளங்களை கண்டறிவதற்காக கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.