சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
தென்னாபிரிக்காவில் Omicron என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதால் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஐரோப்பிய நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சூரிச் விமான நிலையத்திற்கு வந்த அனைத்து தென்னாப்பிரிக்க நாட்டு மக்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என்றும் தகவல் அனுப்பியதாக பெடரல் பொது சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
சுகாதார அலுவலகமானது, ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து, சுவிஸ் ஏர் லைன்ஸ் விமானத்திற்கு வந்த பயணிகளின் பட்டியலை, மாநில அதிகாரிகளுக்கு அனுப்பி, கொரோனா குறித்த அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டிருக்கிறதா? என்பது சரிபார்க்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.