திட்டமிட்டபடி ‘ஜெயில்’ படம் டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. இந்த படத்தில் அபர்நிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த படத்தை திரையிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் தற்போது சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி இந்த படத்தை வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
.@gvprakash 's #Jail is all set to release on December 9th in cinemas. One of the most expected Tamil films next month 👍 @Vasantabalan1 pic.twitter.com/27KpqnoWQO
— Kaushik LM (@LMKMovieManiac) November 28, 2021