கன்னிராசி அன்பர்களே..!! இன்று நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டால் கூடுமானவரை நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை வந்து நீங்கும்.
உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள் அதுபோதும். பயணங்களின்போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தாமதமான காரியங்கள் இன்று வேகம் பிடிக்கும். வீண் கவலை விலகிச்செல்லும். மனம் கொஞ்சம் இன்று ஓரளவு நிம்மதியாகவே காணப்படும்.
இன்று மாணவ கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடினமாக உழையுங்கள் அப்பொழுதுதான் பாடங்களை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்