Categories
மாவட்ட செய்திகள்

வெள்ளை பூசணியில் நெய் தீபம்…. 1000 கிலோ மலர்களால் வழிபாடு….. ஜொலித்த காலபைரவர்….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் பங்கஜாமில் காலனியில் பிரசித்தி பெற்ற அலங்காரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரே கல்லில் வடமுகம் நோக்கி துர்க்கை மற்றும் தென்முகம் நோக்கி காலபைரவர் உருவச்சிலை 18 திருக்கரங்களுடன் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி முதல் 6 ஆம் ஆண்டு ஜென்மாஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின்போது 18 யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் தேய்பிறை நாளில் கால பைரவரை வழிபடுவதற்கான உகந்த நாள் என்று நம்பப்படுகிறது. எனவே கார்த்திகை தேய்பிறையான நேற்று கால பைரவருக்கு அலங்கார தரிசனம் மற்றும் பூஜைகள் செய்து சிறப்பாக வழிப்பட்டனர்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டனர். மேலும் காலபைரவருக்கு ஆயிரம் கிலோ மலர்களால் அலங்காரம் செய்து பக்தர்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர்.

Categories

Tech |