Categories
மாநில செய்திகள்

மக்களே..! சென்னையின் தற்போதைய நிலை இதுதான்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை தண்ணீர் தேங்கிய 454 இடங்களில் அறுபத்தி ஒன்பது இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 22 சுரங்கப்பாதைகளில் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை, மெட்லி சுரங்கப்பாதை தவிர மற்ற பகுதிகளில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்தம் 4,027 புகார்களில் 528 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என்று மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |