Categories
மாநில செய்திகள்

`ஓமிக்ரான்’ வைரஸ்….. விமான நிலையத்தில் தீவிர சோதனை…. தமிழக அரசு….!!!!

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் புதிய வகை ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதுவரை 55,090 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதில் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |