பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வி, சமூக நலன் மற்றும் காவல் ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். போக்சோ சட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, பாலியல் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.