மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் மொட்டை மாடியில் இளம்பெண்ணின் உடல் அழுகி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மொட்டை மாடியில் கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் 20 வயது உள்ள அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து உள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து கூறியது, “கடந்த வியாழக்கிழமை அன்று சில சிறுவர்கள் பயன்படுத்தப்படாத அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது லிப்ட் அறையில் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பெண்ணின் உடல் கிடந்ததை பார்த்த சிறுவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சிறுவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.