பாகிஸ்தானில் வசித்த சமயத்தில் பள்ளிக்குச் சென்றபோது தலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுப் தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
மலாலா யூசுப் 15 வயது சிறுமியாக இருந்த போது பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்ட பின்பு அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
அதன்பின்பு, பிரிட்டன் நாட்டிற்கு சென்று, தன் பணியைத் தொடர்ந்ததன் பயனாக கடந்த 2014ம் வருடத்தில், தன் 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்று சாதனை படைத்தார். தற்போது, தத்துவஇயல், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
மலாலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பட்டமளிப்பு விழா தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.