சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில், இவரும் இவரது கணவர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா மேனன், சமந்தா போலவே இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா போலவே இருக்கிறீர்களே? என கமெண்ட் செய்து வருகின்றனர்.