பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், எங்கள் நாட்டு படையினர் சோதனை மேற்கொள்ள அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் செய்தி தொடர்பாளரான கேப்ரியல் அட்டல், இத்திட்டங்கள் ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
வறுமை மற்றும் போர் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய, பிரிட்டன் நாட்டிற்குள் நுழைவது தொடர்ந்து நடக்கிறது. மேலும் அகதிகளை சட்டவிரோதமாக கடத்தக்கூடிய சில கும்பல் அகதிகளுக்கு உதவி செய்கிறது.