தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக மீது பாஜக பல்வேறு விமர்சனங்களை கூறியது. அதில் முக்கியமாக திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை கூறியது. ஆனால் இந்த விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற இடத்திற்கு அண்ணா காலத்திலேயே திமுக வந்துவிட்டது.
அதுமட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் தனது மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வதற்கு இதுவரை தடை விதித்தது இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குடும்பத்துடன் அடிக்கடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாகும்.
அதன்படி ஜூலை மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் பெற்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் மடத்துக்கு தனது மனைவியுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ஆசி வாங்க சேர்ந்தாரா என்று பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.