தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ மழையும் திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ, திருப்போரில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் அம்பத்தூரில் 12 செ.மீ, பெரம்பூர் 10 செ.மீ, அயனாவரத்தில் 10 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 செ. மீ மழை பதிவாகியுள்ளது.