Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய வகை கொரோனா எதிரொலி…..! இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடர் நடைபெறுமா …..?

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டிசம்பர் 17-ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

தென் ஆப்பிரிக்கா தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதோடு இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை கொண்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி ,இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும்  இத்தாலி உட்பட நாடுகள் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு கடும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் விளையாட்டுப் போட்டிகளும் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாக்கியுள்ளது .இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நேற்று ஆடிய நெதர்லாந்து அணி மீதமுள்ள 2 போட்டிகளையும் ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்ப உத்தேசித்துள்ளது.

இதனிடையே அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது . ஆனால் தற்போது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு செல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறும்போது,” அங்குள்ள அடிப்படை சூழ்நிலை என்பது குறித்து தெளிவான விளக்கத்தை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளோம். இதனால் அந்த விவரங்கள் கிடைக்காதவரை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் பேச முடியாது.

தற்போதுள்ள திட்டப்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் டிசம்பர் 8 அல்லது 9ஆம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட வேண்டும் “என்றார் மேலும் பேசிய அவர்,” திட்டமிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால் தற்போது வடக்கு தென்னாபிரிக்கா பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜோகன்னஸ்பர்க், செஞ்சூரியன் ஆகிய  மைதானங்களில் நடைபெற உள்ள போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றலாம். அதே சமயம் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி போட்டி குறித்து பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .தற்போது இந்திய ‘ஏ’ அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |