Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி கூட இல்ல…. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. கொட்டும் மழையில் போராட்டம்….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள 14வது வார்டு கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவதானபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பெரியகுளம் தாலுகா கட்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து கக்கன்ஜி நகரில் சாலை,குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதி, பெண்களுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வலியுறுத்தியுள்ளனர். மேலும் கொட்டும் மழை என்றும் பாராமல் கட்சி உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |