Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலை விபத்து…. யாராக இருந்தாலும் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு, நெடுஞ் சாலை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து “இன்னுயிர் காப்போம்” என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக “நம்மை காக்கும் 48” என்ற மாபெரும் திட்டம் அமலாகும்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்தத் திட்டத்தில், 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழ்கிற போது, அதனால் பாதிக்கப்படுவோர் எந்த நாடு அல்லது மாநிலத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க உள்ளது. இது நாட்டிலேயே முன்மாதிரியான திட்டம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |