சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. சென்னையை பொருத்தவரை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதைத்தவிர சோழவரம்-15 செ.மீ.; திருவள்ளூர்-13 செ.மீ.; செம்பரம்பாக்கம்-12 செ.மீ.; பொன்னேரி-12 செ.மீ.; ஜமீன் கொரட்டூர்-10.9 செ.மீ.; செங்குன்றம்-10.7 செ.மீ.; தாமரைப்பாக்கம்-9.8 செ.மீ.; பூண்டி-8.8 செ.மீ.; கும்மிடிப்பூண்டி-8.7 செ.மீ.; திருவாலங்காடு-8.4 செ.மீ.; பூந்தமல்லி-7 செ.மீ.; ஊத்துக்கோட்டை-6 செ.மீ.; கண்ணன்கோட்டை-5.7 செ.மீ.; திருத்தணி-4.4 செ.மீ.; பள்ளிப்பட்டு-2.2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளன.