திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நடத்தப்பட்ட ஒரு பேரணியை திடீரென வன்முறை வெடித்ததற்கு பதிலுக்கு பதில், பழிக்குப் பழி அடிப்படையில் மட்டும் இல்லை தோழர்களே……
நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலுக்காகவும் தான். அவர்கள் ஒரு தேர்தலை எதிர்கொள்ள போகிறார்கள் என்றால் உடனே அவர்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கின்ற யுக்திக்கு தாவுவார்கள். எப்படி வாக்குகளை ஒருங்கிணைப்பது இந்துக்களா ? இந்துக்கள் அல்லாதவர்களா ? அதற்கு வன்முறையை தூண்ட வேண்டும். அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எண்ணற்ற பல வன்முறைகள்.
முதலில் இடதுசாரிகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், லெனின் சிலை தகர்க்கப்பட்டது, நாடு அமைதியாக இருந்தது. இவையெல்லாம் மிக மோசமான ஒரு கலாச்சாரம். ஆட்சிமாற்றம் ஏற்படுகின்ற போது அதிகாரத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்திலிருந்த ஆட்சியாளர்களின் அடையாளங்களை எல்லாம் அழித்து, ஒழிப்பது என்கின்ற முறையில் களமிறங்கினால் என்னவாகும். யோசித்துப் பாருங்கள். அவை ஜனநாயகத்திற்கு புறம்பானதில்லையா ? ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைக்கின்ற கேவலமான செயல் இல்லையா? என விமர்சித்தார்.