Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரை மீசை, அரை தாடியுடன் காட்சியளிக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் – ஏன் தெரியுமா?

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ஜாக் காலிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காண்டாமிருகங்களைப் பாதுகாக்க புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் – ரவுண்டரான முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, தனது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நேற்று காலிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் காலிஸ் தனது மீசை, தாடியின் ஒரு பாதியை மட்டும் எடுத்துவிட்டு, மீதியிருக்கும் பாதி பக்கத்தை எடுக்காமல் விட்டிருந்தார்.

ஜாக் காலிஸ்

இதற்கான காரணம் என்னவென்று கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களைப் பாதுகாக்கவும், அதற்கான நிதி திரட்டவும் இந்தச் சவாலை ஏற்றுள்ளேன் என்றும், வரும் நாட்கள் மிகவும் சுவாரஸ்மாக இருக்கபோகிறது என்றும், அனைத்தும் நன்மைக்கே என்றும் கூறியுள்ளார். காலிஸின் இந்த புகைப்படம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/B5XWuRAhzTI/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |