தனுசு ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவும் நன்மையும் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று விருந்து விழாவில் பங்கேற்க வாய்ப்பு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செயல்படுங்கள் அது போதும். திடீரென்று மன தடுமாற்றமும் குழப்பமும் கொஞ்சம் இருக்கும். கூடுமான வரை பொறுமையை மட்டும் கையாளுங்கள்.
பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூல் ஆகும்.. நிலுவைத் தொகைகள் வசூலாகும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். அந்த பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்