லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து அமெரிக்காவில் விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன் இருவரும் இணைந்து நடிக்கும் அதிரடியான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.