சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் பெரிய சேமூர் எல்.வி.ஆர். காலனிக்கு போகும் பாதையில் சாலையில் பெரும்பாலானோர் குப்பைகளை கொட்டிசெல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதுமட்டுமின்றி அந்த குப்பைகள் காற்றில் பறந்து நடந்து செல்வோரின் மீது படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.