கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி மற்றும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டை சென்றதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் கிலோ 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார் என்று தக்காளி மொத்த வியாபாரி சங்கம் சென்னை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் விலை உயர்வை கருத்தில் கொண்டு வாகனம் மூலம் தக்காளி விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.