Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவர் சேமித்த பணத்தை தாங்க…. தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

கணவர் சேமித்து வைத்த பணத்தை வழங்க கோரி மூதாட்டி வங்கியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தென்னம்புலத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ராமலிங்கத்தின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக மூதாட்டி மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

அப்போது அந்த முதியவர் தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு வாரிசுதாரரை நியமிக்காமலிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி அதிகாரிகள் மூதாட்டியிடம் வாரிசு சான்று மற்றும் நோட்டரி வக்கீல் கையொப்பம் பெற்று வந்தால் தான் பணம் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர். அதன்பின் மூதாட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரி அந்த மூதாட்டியின் மகன்களில் ஒருவர் வாரிசு சான்று கொடுக்க கூடாதென தனக்கு கடிதம் கொடுத்துள்ளதாக கூறி காத்தாயியிடம் வாரிசுசான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து அந்த மூதாட்டி மீண்டும் மேலாளரிடம் சென்று தனது கணவரின் வங்கி கணக்கிலுள்ள பணத்தை தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு உரிய ஆவணங்களை கொடுத்தால் தான் பணம் பெற முடியும் என்று அதிகாரிகள் கூறியதால், 3 மணிநேரம் அந்த மூதாட்டி வங்கி வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் வங்கி ஊழியர்கள் அந்த மூதாட்டியிடம் உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதால் அவர் போராட்டத்தை கைவிட்டுள்ளார். இதனையடுத்து எனது வயதை கருத்தில் கொண்டு கணவரின் சேமிப்பு கணக்கிலுள்ள பணத்தை தருமாறு வங்கி மேலாளரிடம் மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |