ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் பூனை ஒன்று தன் உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள dartmoor என்ற பகுதியில் வசிக்கும், ரிக்கி ஓவன்ஸ் என்ற நபர், 2 நாட்களுக்கு முன்பு, தன் குடியிருப்பின் கதவுக்குள் ஏதோ புகுந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆனால், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் மது விடுதிக்கு சென்று விட்டார். அதன்பின்பு அவர் குடியிருப்பிற்கு திரும்பியபோது, தன் பூனை வித்தியாசமாக செயல்படுவதைப் பார்த்து குழம்பியிருக்கிறார்.
அவரின் பூனை குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்த பைகளை சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. அதனை, எச்சரிக்கை என்று உணர்ந்த அவர் உடனடியாக பைகளை மெதுவாக நகர்த்தி பார்த்தார். அங்கு, “புலிப்பாம்பு” இருந்தது. எனவே, அதனை பாதுகாப்பாக தூக்கி பின் புறத்தில் இருந்த வனப்பகுதியில் விட்டிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “என் பூனை எனக்கு எச்சரிக்கை செய்தது. இதன் மூலம் எனக்கு பாடம் கிடைத்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.