‘மாநாடு’ படம் வெற்றியடைய சூர்யா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் வெற்றியடைய சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துக்கள்! இந்த திரைப்படம் சாதனைகளை முறியடித்து வெற்றி பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
All the best!!! Let it break all records!!!👊🏽 https://t.co/XCdqq1Yp8L
— Suriya Sivakumar (@Suriya_offl) November 25, 2021