நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாமல் தவற விடுபவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். அதனால் பீகார் மாநிலத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு மாபெரும் பரிசுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
லாட்டரி குலுக்கல் மூலம் பரிசுக்குறியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், கேஸ் ஸ்டவ், மின்விசிறி மற்றும் போர்வை என பரிசு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவும், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தவும் தான் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்து உள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.