அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் குறித்து பதில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக டேவிட் செயல்பட வேண்டும் என ரசிகரின் விருப்பத்துக்கு வார்னர் பதிலளித்துள்ளார் .
14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சீசனில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 4-வதுமுறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் நடப்பு சீசனில் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றிருந்த டேவிட் வார்னர் சிறப்பாக விளையாட காரணத்தினால் அவரை அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் அந்த அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார் .இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடி அசத்தினார்.
இதனால் மீண்டும் டேவிட் வார்னரை ஹைதராபாத் அணியில் தக்கவைக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . இதனிடையே பிரபல ஊடக நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹைதராபாத் அணி டாம் மூடியை மீண்டும் பயிற்சியாளராக முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் அடுத்த ஐபில் போட்டியில் டாம் மூடி பயிற்சியாளர், டேவிட் வார்னர் கேப்டன் எனக் குறிப்பிட்டிருந்தார் .இதற்கு பதிலளித்துள்ள டேவிட் வார்னர் ‘நோ தேங்க்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதில் மூலம் இனி ஹைதராபாத் அணி பக்கம் வர மாட்டேன் எனவும் ,கேப்டனாக பொறுப்பேற்க மாட்டேன் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என ரசிகர் கூறிவருகின்றனர்.