Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை …!!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வி துறை அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |