பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது . இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இதுவரை வெற்றி பெறாத (10 தோல்வி, ஒரு டிரா) வங்காளதேச அணி முதல் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அதே சமயம் வங்காளதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் இது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது .இந்திய நேரப்படி போட்டி இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.