அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,744 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட வேண்டும்.
தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்ட 2774 பேருக்கு மாத ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கவும், இதற்கான ஊதிய தொகையாக 5 மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.