Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக நடக்கும் விற்பனை… போலீசாருக்கு கிடைத்த தகவல்… 2 பேர் கைது…!!

வெவ்வேறு பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் எருமப்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்துருவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள காவிரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காவிரி ஆர்.எஸ் பகுதியை சேர்ந்த கோட்டைசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் வைத்திருந்த பையில் விற்பனை செய்வதற்காக 23 மதுபட்டிகள் இருந்துள்ளது.  இதுகுறித்து காவல்துறையினர் கோட்டைசாமியை கைது செய்து 23 மதுபாடில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |