Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-47 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும்.

Image result for ISRO has once again made the nation proud!"

இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ பிஎஸ்எல்வி சி – 47 ராக்கெட் மூலம் கார்டோசாட் – 3 மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய, இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். மீண்டும் உலக அரங்கில் நமது நாட்டை நீங்கள் தலைநிமிர செய்துள்ளீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |