மின்விளக்கை போட முயன்ற விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பால் கறப்பதற்காக மாட்டு தொழுவத்திற்கு சென்ற மோகன் அங்கிருந்த மின்விளக்கின் சுவிட்சை போட்டுள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.