மருத்துவ சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வரையறைகளை 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த வருமான வரம்பு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு காண ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் இட ஒதுக்கீடு வரையறுக்கப்படும் வரை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.