Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! சேலம், கோவை இனி திமுக பக்கம்…. அலற போகும் அதிமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்க ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு எந்தவித உரிமையும் இல்லை. 11ஐ.ஏ பெண்டிங் இருக்கு அந்த கேஸ் ல, எல்லாம் டிஸ்போஸ் போகவேண்டும். இன்னும் 2 நாட்களில் அந்த வழக்கு வர இருக்கிறது, இது தான் அந்த வழக்கின் அம்சம், அதேபோல் வெற்றிவேல் போட்ட வழக்கும், இன்னும் நிலுவையில் தான் உள்ளது, அவர் இறந்துவிட்டார். ஆனால் வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கு. எனவே எந்த முடிவையும் இவர்கள் எடுக்க முடியாது எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பதாகும், இது தான் முறை.

ஆகவே எதோ இவர்கள் பெயரை போட்டு, படத்தை போட்டு, கார்டு அடித்துவிட்டு இப்போ தமிழ்நாடு முழுவதும் தோற்றுபோய் அசிங்கமா நிக்குற நிலைமையில் ஒரு கூட்டம் வேற… நான் கேட்டுகொள்வதெல்லாம் வருகிற பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் நிற்க சொல்லி, இல்ல நீங்களே சீட்டு கேட்டாலும் சரி, சீட்டு கேட்கிற நிலைமையில் யாரும் இல்ல இப்போ அதிமுகவில், ரொம்ப கஷ்டமான நிலைமையில் இருக்கு, ஆகவே இந்த நிலைமையில் சீட்டு கேட்டால் சொல்லுங்க கொள்ளையடிச்ச மந்திரிகளை செலவு பண்ண சொல்லுங்க, மாவட்ட வாரியாக கொள்ளையடித்த நிறைய கேஸ் இப்ப சோதனை செய்கிறார்கள் அவங்களை நின்னு செலவு செய்ய சொல்லி ஜெயிக்க வைத்துவிட்டு போங்க, எத்தனை பேர் ஓட்டம் பிடிக்குரார்கள் என்று நான் பார்க்கிறேன்.

ஆகவே நடக்கவிருக்கிற மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் இன்றைக்கு இந்த இடத்தில் சொல்லி நிக்குறேன், ஒரு சில இடங்கள் கிடைக்கும், மாநகராட்சி ஒன்னு கூட கிடைக்காது. திராவிட முன்னேற்ற கழகம் 90% வெற்றி பெரும். இந்த ஆட்சியின் மீது குறைகளும் இல்லை, எதுவும் இல்ல வெற்றி பெறுவதற்குரிய தகுதியை இந்த முதல்வர் பெற்று இருக்கிறார். ஆகவே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த தலைமை இருக்கின்ற வரை ஒரு வெற்றியும் பெறாது, வெட்டிதனமான விவகாரம் இவர்கள் தேர்தலில் போட்டியிடுவது, பேசாம தேர்தல் வேண்டாம் என்று சொல்லிரலாம் அசிங்கப்பட போகிறீர்கள், இது தான் நடக்க போகிறது, கோவையும், சேலமும் போயிரும் இன்னைக்கு எழுதி வச்சிக்கோங்க. கோவை, சேலம் மாநகராட்சியும் போகும், கவுன்சிலர் வெற்றி பெறுவது கூட கஷ்டமா இருக்கும். இது தான் அதிமுகவின் நிலைமை.

71/2 மணிக்கு போய் தஞ்சாவூரில் பயிர் நட்டத்தை போய் பாக்குறாங்க இருட்டுல போய், எவ்வளவு பேர் பல லட்சம் தென்னைகளை இழந்து, தன் கண்களை போல, குழந்தைகளை போல வளர்த்த தென்னை மரங்களை இழந்து தெருவிலே நிற்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை எடப்பாடி பழனிசாமி, அங்க போய் நிக்குறாங்க 7 மணிக்கு பயந்து பயந்து ஒரு 25 பேருடன் நின்று பயந்துட்டு ஓடுறாங்க, தஞ்சாவூர்ல இருந்து, இதுபோன்ற நிலை தான் நீடிக்கிறது. அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை, தகுதி படைத்தவர் வி.கே.சசிகலா என்கின்ற சின்னம்மா. அவர்கள் நினைத்தால் மறுபடியும், அதாவது அவர்களுக்கும் நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும், இவர்கள் கூட்டினால் அவங்களும் கூட்டுவாங்க, இப்படி தான் போய் முடியும். ஆகவே இவர்கள் அடித்துள்ள மெம்பர்சிப் கார்டு எல்லாம் செல்லாது, ஊரை ஏமாற்றுவதற்காக அடித்தது இது. அது போக போக இந்த விஷயங்கள் வெளியே வரும் என தெரிவித்தார்.

Categories

Tech |