மலேசியா சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மலேசியா , சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். இடர்பாடுகளை தீர்க்க சிங்கப்பூர் மலேசியாவுடன் தற்காலிக விமானப் போக்குவரத்து உடன்படிக்கை தேவை. சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் கோவிட் விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
Categories
BREAKING : மலேசியா, சிங்கப்பூர் – தமிழகம் நேரடி விமான சேவை தேவை…. முதல்வர் கடிதம்…!!
