திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பு வழங்குதலை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:” பள்ளிச் சூழலில் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், 14417 என்ற எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் தவிர பள்ளிகளின் நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்கு வரக்கூடிய புகார் எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும், அவரவர் குழந்தைகள் ஏதேனும் புகார் கூற முன்வந்தால் அவற்றை பொறுமையாக விசாரிக்க வேண்டும். யார் மீதும் யாரும் தவறாக புகார் தெரிவிக்க வேண்டாம்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.