Categories
மாநில செய்திகள்

குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்த…. மருத்துவர் காலமானார்…. சோகம்…!!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் மருத்துவர் சி. அசோக்குமார்(72). இவர் பொதுநல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை தன்னுடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மன்னார்குடி பகுதியில் இவர் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருடைய இரண்டு கண்களும் லயன்ஸ் கிளப் மூலமாக தானமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |