Categories
மாநில செய்திகள்

BREAKING : 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது… வானிலை தகவல்…!!!

அடுத்த 12 மணி நேரத்தில் தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |