மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும். செயல்களில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். இன்று உங்களது மேலான யோசனையை செய்வதற்கு தயாராக இருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நிலையும் மாறப் போகும்.
இனியாவது வாக்கு கொடுக்கும் முன் யோசித்து கொடுங்கள் அது போதும். நட்பு வட்டம் விரிவடையும். உயர் அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகளும் தீரும். இன்று உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிக்கக் கூடும்.
உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்